BestWeb.lk

எங்களைப் பற்றி

Home > எங்களைப் பற்றி

BestWeb.LKஎன்றால் என்ன?

LK Domain Registry ஆனது 2009 ஆம் ஆண்டு முதல் BestWeb.LK போட்டியை நடத்தி வருகிறது. மேலும் இது பதினைந்தாவது ஆண்டில் நடைபெறும் போட்டியாகும்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு கவர்ச்சிகரமான மற்றும் திறமையான இணையத்தளம் எந்தவொரு நிறுவனத்திற்கும் ஒரு முகப்புத்தளமாகச் செயல்படுகிறது. BestWeb.LK ஆனது இலங்கையின் ஒரேயொரு வலைத்தள வடிவமைப்புப் போட்டியாகத் தனித்துவமாக நிற்கிறது. இது நாடு முழுவதும் இணைய இருப்பைக் காட்சிப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது. உள்ளடக்கிய தன்மை கொண்ட இந்தப் போட்டி .lk டொமைன் கொண்ட அனைத்து இணையத்தளங்களும் பங்குபற்றக்கூடியது.

இந்தப் போட்டி, போட்டியாளர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மதிப்பிடும். வலைத்தள வடிவமைப்பாளர்களின் விரிவான அனுபவம் மற்றும் திறமையை அங்கீகரிக்கும் நிபுணதத்துவ நடுவர்கள் குழுவால் வலைத்தளங்கள் மதிப்பிடப்படும். கூடுதலாக, புதிய மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு செயல்முறை மூலம் பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த வலைத்தளங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

BESTWEB.LK
போட்டியில் ஏன் பங்கேற்க வேண்டும்?

 

 

 

  1. வெற்றியாளர்கள் மதிப்புமிக்க BestWeb.LK விருதுகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவார்கள்.
  2. உங்கள் இணையத்தளத்தில் ”BestWeb.LK வெற்றியாளர் இலச்சினையை” காண்பிக்கும் சிறப்புரிமை உங்களுக்குக் கிடைக்கும். அதனுடன் உங்கள் வெற்றியை வெளிப்படுத்தலாம்.
  3. வாடிக்கையாளர் பார்வையிடலை மேம்படுத்துதலாம். நிறுவனங்கள் மீது நீடித்து நிலைக்கும் தாக்கத்தை ஏற்படுத்துதலாம். உங்கள் வரவுசெலவுத் திட்டத்தை சரிபார்க்கலாம். மக்கள் தொடர்பு மற்றும் இணைய சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை உருவாக்கலாம். உங்கள் வலைத்தள மேம்பாட்டின் முன்னேற்றம் குறித்த மதிப்புமிக்க கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
  4. விண்ணப்பதாரர்கள், வாடிக்கையாளரின் சம்மதத்துடன், இலவச பாதுகாப்பு ஸ்கேன் வசதியைப் பயன்படுத்துவதற்குத் தகுதி பெறுகிறார்கள். இது பிழைகளைச் சரிசெய்வதற்கும் சாத்தியமான பாதுகாப்பு மீறல்களைத் தடுப்பதற்குமான வழிகாட்டுதலை வழங்கும்.
  5. “www.bestweb.lk” இல் அவர்களின் இணையத்தளத்திற்கான இணைப்புடன் முக்கியமாக இடம்பெறுவதுடன் , வெற்றியாளர்கள் மேம்பட்ட தெரிவுநிலையை அனுபவிக்கலாம்.
  6. பாரபட்சமற்ற வலைத்தள வல்லுநர்களைக் கொண்ட ஒரு மதிப்பிற்குரிய நடுவர் குழுவானது, படைப்பாற்றல், வரைகலை வடிவமைப்புத் தரம், கலைத்திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பயனருக்கான உள்ளடக்கத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சமர்ப்பிப்புகளை மதிப்பீடு செய்யும்.
  7. தங்கள் இணையப்பக்கத்தில் லீட்களைத் (leads) தக்கவைத்துக்கொள்ள, நல்ல வலை வடிவமைப்பின் முக்கியத்துவத்தை விண்ணப்பதாரர்கள் புரிந்துகொள்வது மிக முக்கியம்.

பதிவு செய்வது எப்படி?

உங்கள் விண்ணப்பத்தைத் தொடர, “இப்போதே விண்ணப்பிக்கவும் (APPLY NOW)” பொத்தானைக் கிளிக் செய்யவும் அல்லது rs.domains.lk இல் உள்நுழைந்து உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். உங்களிடம் ஏற்கனவே ஒரு Account இருந்தால், உள்நுழையவும். நீங்கள் ஒரு புதிய வாடிக்கையாளராக இருந்தால், தயவுசெய்து புதிய Accountஐ உருவாக்கவும். நீங்கள் டொமைனின் பதிவாளர், நிர்வாகி, பில்லிங் அல்லது தொழில்நுட்பத் தொடர்பாளராகப் பட்டியலிடப்படவில்லை என்றால், இளையத்தளத்தினைப் பதிவுசெய்தவர் மற்றும் நிர்வாகிக்கு ஓர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

விண்ணப்பத்தை முன்கொண்டுசெல்வதற்கு, அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கூடுதலாக, gov.lk, sch.lk மற்றும் ac.lk இணையத்தளங்களும் சமர்ப்பிப்புகளுக்கான பதிவு முறையைப் பயன்படுத்தலாம். இந்த டொமைன்களுக்கு, ஒரு அங்கீகரிக்கப்பட்ட நபர் சீல் வைக்கப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட கடிதத்தை வழங்க வேண்டும், அதை topweb@domains.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது விண்ணப்பத்தை முன்கொண்டுசெல்வதற்கு கணினியில் பதிவேற்றலாம். உங்கள் இணையதளம் மதிப்பீட்டு அளவுகோல்களுடன் இணங்குவதை உறுதிசெய்ய, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்யவும்.

இந்த ஆண்டு, நிலையான விண்ணப்பக் கட்டணம் ரூ. 6,000. குறிப்பிட்ட பிரிவுகளுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் பிரிவுக்கு பணம் செலுத்த வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க பிரிவுகள் பக்கத்தைப் பார்வையிடவும்.

இரட்டை அங்கீகாரம்

TopWeb.LK மற்றும்
BestWeb.LK இரட்டை வெற்றி

BestWeb.LK என்பது ஆண்டுதோறும் நடைபெறும் போட்டியாகும், அதே சமயம் TopWeb.LK மாதந்தோறும் செயல்படுகிறது. இரண்டு முயற்சிகளும் LK டொமைன் ரெஜிஸ்ட்ரியால் நடத்தப்படுகின்றன, .LK இணையதளங்களின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் ஒன்றுபட்டது. BestWeb.LK பல பிரிவுகள் மற்றும் சிறப்பு விருதுகளை கொண்டுள்ளது, TopWeb.LK ஒரு வலுவான வலைத்தளத்தின் அடித்தளத்தை உருவாக்கும் முக்கிய பண்புகளை மதிப்பிடுவதில் கவனம் செலுத்துகிறது.

BestWeb.LK இல் உங்கள் இடத்தைப் பாதுகாப்பதற்கான முதல் படியாக TopWeb.LK ஐ நினைத்துப் பாருங்கள். TopWeb.LK இல் பங்கேற்பதன் மூலம், உங்கள் வலைத்தளத்தின் செயல்திறனைப் பற்றிய ஆரம்ப நுண்ணறிவைப் பெறுவீர்கள். அத்துடன், அடுத்த ஆண்டின் போட்டி அழைப்புக்காக காத்திருக்காமல் BestWeb.LK போட்டியில் நீங்கள் உங்கள் இணையத்த்ளத்தை நிலைநிறுத்துவதைப் பற்றி உறுதியாக இருக்க முடியும்.

கூடுதலாக, பங்கேற்பாளர்கள் உங்கள் இணையதளத்தை மேம்படுத்தவும் விரிவாக்கவும் உதவும் விரிவான மதிப்பீட்டு அறிக்கையைப் பெறுவார்கள். செப்டம்பர் 2024 முதல் ஜூன் 2025 வரை TopWeb.LK இன் வெற்றியாளர்கள், BestWeb.LK 2025க்கான போட்டியாளர்களாகத் இயல்பாகவே தகுதி பெறுவார்கள்.

TopWeb.LK மற்றும் BestWeb.LK மூலம் இரட்டை அங்கீகாரத்தை அடையுங்கள்

  • BestWeb.LK என்பது ஆண்டுதோறும் நடைபெறும் போட்டியாகும். அதே சமயம் TopWeb.LK என்பது LK டொமைன் ரெஜிஸ்ட்ரியால் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.
  • BestWeb.LK போட்டிக்கான பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது மற்றும் சிறப்பு விருதுகளை வழங்குகிறது, அதேசமயம் TopWeb.LK மதிப்பீடு பொதுவான பண்புக்கூறுகளில் கவனம் செலுத்துகிறது. இரண்டு போட்டிகளும் “.LK” இணையத்தளங்களின் தரத்தை உயர்த்தும் பொதுவான இலக்கை பகிர்ந்து கொள்கின்றன.
  • TopWeb.LK இல் பங்கேற்று வெற்றி பெறுவது BestWeb.LK இல் உங்கள் வாய்ப்புகளை கணிசமாக உயர்த்தும். TopWeb.LK இல் வெற்றியைப் பெறுவதன் மூலம், மற்றொரு வருடாந்திர சுழற்சிக்காக காத்திருக்காமல் BestWeb.LK இல் உங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எனவே, உங்கள் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க TopWeb.LK க்கு விண்ணப்பிக்க பரிந்துரைக்கிறோம்.
  • ஆண்டுதோறும் நடைபெறும் BestWeb.LK போட்டியில் வெற்றி பெறுவதற்கு சிறந்த இணையத்தளங்களில் ஒன்றாக இருப்பது கட்டாயம். ஆனால், TopWeb.LK போட்டியானது குறைந்தபட்ச தரத்தை பூர்த்தி செய்யும் அனைத்து இணையத்தளங்களையும் ஏற்றுக்கொள்கிறது.
  • BestWeb.LK-இல் தொழில்நுட்ப நிபுணர்கள் நடுவர்களாக இருந்து தீர்மானிக்கிறார்கள். ஆனால், TopWeb.LK-இன் முடிவுகள் பெரும்பாலும் தானியங்கி முறை (Automation) மூலம் எடுக்கப்படுகின்றன. இதில் மனிதர்களின் தலையீடு குறைவாகும்.
Skip to content
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.